Thursday, June 28, 2007

நெருப்பாடல்

ஒரு பாடல் கவர்வதற்கு என்ன காரணம் என்று சொல்லத் தெரிவதில்லை. உட்பொருளுக்காகக் கவர்ந்த சில பாடல்களின் இசையமைப்பைக் கவனித்துக்கொண்டதில்லை. குரலுக்காகக் கவர்ந்த பாடல்களிலே இசையிருக்கின்றதா என்று கவனித்துக்கொண்டதில்லை. இசையமைப்புக்காகக் கேட்கும் பாடல்களின் உட்பொருளை ஒத்துக்கொள்கிறோமென்ற அர்த்தமில்லை.

இந்நெருப்பாடலிலே என்னை எது கவர்ந்ததென்று நான் இதுவரை இருந்து வகை பிரித்து யோசித்துப் பார்த்ததில்லை. ஆனால், பாடலின் வரிகளிலே பாதிக்குக் கிட்ட அமைக்கப்பட்ட விதத்திலே கருத்தளவிலே முழு ஒப்புதல் இல்லாதபோதுங்கூட, கேட்டமாத்திரத்திலே பிடித்துப்போன ஒரு பாடல். பாடலுக்குப் பொருத்தமாகவிருக்குமென்று படத்தோடு சேர்த்துருவாக்கிய "நாயகனின் முகத்தின்" தெளிவின் செறிவினை யூ ரியூப்பிலே மேலேற்றும்போது இழந்தது வருத்தமேதான். ஆனால், Lost in Super Highway Transportation ஆனதுக்கு இனிச் செய்ய ஏதுமில்லை.



'07 ஜூன் 28 வியாழன் 20:30 கிநிநே

Labels:

0 Comments:

Post a Comment

<< Home